விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்: கே. அண்ணாமலை 

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளிக்கும் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளிக்கும் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

இதுதொடர்பாக அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு  விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி கொடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார் . ஆனால் எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது ஏற்பட்ட நிவர் புயலின்போது ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் மு.க. ஸ்டாலின்.

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த தற்போதைய முதல்வர் இப்போ எப்படி பார்க்கின்றார் என்று தெரியவில்லை.

தமிழக முதல்வரின் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ச்சியினை ஒரு டூரிஸ் பேக்கேஜ் மாதிரி செய்கின்றனர். மழை வெள்ள பாதிப்பு பார்வையிட செல்லும் முதல்வர் விவசாய நிலத்தில் அழுகி கிடக்கும் பயிர்களை கையில் எடுத்து பார்த்தால்-தான் விவசாயின் வேதனை புரியும். தமிழக முதல்வர் தனது தவறை திருத்தி கொள்வார் என்று நம்புகின்றேன்.

ஸ்ரீரங்கம் கோயிலில்  கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல, தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரப்படும்.

வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரண நிதி வழங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com