நூல் விலை உயர்வு: ஈரோட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நூல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தினால் அடைக்கப்பட்டுள்ள  ஜவுளிகடைகள்.
நூல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தினால் அடைக்கப்பட்டுள்ள  ஜவுளிகடைகள்.



ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜவுளி உற்பத்திக்கு பயன்படும் நூல் விலை கடந்த கடந்த 40 நாளில் 40 ஆம் நம்பர் நுால் ஒரு கிலோ ரூ.250 -இல் இருந்து ரூ. 330-க்கும், 30 ஆம் நம்பர் நுால் ரூ.200 -இல் இருந்து ரூ.290-க்கும், 20 ஆம் நம்பர் நுால் ரூ.140 -இல் இருந்து ரூ.190-க்கும், வெப்ட் 40 ஆம் நம்பர் ஒரு பாக்கெட் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.14,200 என கடுமையாக உயர்ந்துள்ளது. 

கடையடைப்பு போராட்டத்தினால் வெறிச்சோடி காணப்படும் வீதி.

இதனால் சிறு , குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மத்திய , மாநில அரசுகள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் , பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கோரியும்  ஈரோட்டில் 18 அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். 

கடையடைப்பு போராட்டத்தினால் அடைக்கப்பட்டுள்ள  ஜவுளிகடைகள்.

இதன்படி இன்று புதன்கிழமை, நாளை வியாழக்கிழமை என இரு நாள்கள் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெறுகின்றன. இந்த கடையடைப்பு போராட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிகடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையடைப்பு போராட்டத்தினால் வெறிச்சோடி காணப்படும் ஈஸ்வரன் கோவில் வீதி.

இந்த கடையடைப்பு போராட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி வரை வணிகம் பாதிக்கப்படும் என்று ஜவுளி வணிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்தினால் ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கட சாமி வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com