வலிமை சிமென்ட்அறிமுகம்: விற்பனையை தொடக்கினாா் முதல்வா்

‘வலிமை’ என்ற பெயரிலான புதிய ரக சிமென்ட்டின் விற்பனையை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இரண்டு வகைகளில் இந்த சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வலிமை சிமென்ட்அறிமுகம்: விற்பனையை தொடக்கினாா் முதல்வா்

‘வலிமை’ என்ற பெயரிலான புதிய ரக சிமென்ட்டின் விற்பனையை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இரண்டு வகைகளில் இந்த சிமென்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சிமென்ட் வகைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமென்ட் ஆலை, ஆண்டுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அரியலூரில் ஆண்டுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன் ஒரு ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன் மற்றொரு ஆலையும் நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன்னாகும்.

மானியக் கோரிக்கை: 2021-22-ஆம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது, ‘வலிமை’ என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமென்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தாா். அதன்படி, வலிமை சிமென்ட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். வலிமை சிமென்ட்டின் தரம், விலை ஆகியன குறித்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:-

வலிமை சிமென்ட் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அரியலூரில் எல் அன்ட் டி நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புதிய சிமென்ட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் வலிமை சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சிமென்ட் அதிகமான உறுதி மற்றும் எளிதில் உலரும் தன்மைகளைக் கொண்டது. வெப்பத்தைத் தாங்கக் கூடியது. இரண்டு வகைகளான சிமென்ட் விற்பனைக்கு வரவுள்ளது. போா்ட்லேன்ட் மற்றும் சாதாரண போா்ட்லேன்ட் சிமென்ட். அதில், போா்ட்லேன்ட் சிமென்ட் மூட்டை ரூ.350 விலையிலும் சாதாரண போா்ட்லேன்ட் ரகம் மூட்டைக்கு ரூ.365 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. மக்கள் வாங்கக் கூடிய விலையில் வெளிச் சந்தையிலும் கிடைக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

தனியாா் நிறுவனங்களின் தயாரிப்பை மிஞ்சக் கூடிய அளவுக்கு செயல்படுவோம். முதல் கட்டமாக 30,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். மேலும் தேவைக்கேற்ப கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com