9-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 8.36 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 9-வது கட்டமாக இன்று நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில்  8.36 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார
9-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 8.36 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 9-வது கட்டமாக இன்று நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில்  8.36 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் உத்தரவுப் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற எட்டு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

வடகிழக்கு பருவ மழை காரணமாக 23 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், இன்று (18-11-2021) நடைபெற்ற ஒன்பதாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 8,36,796 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3,36,468 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 5,00,328 பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற
கரோனா தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com