கோவை பள்ளி மாணவி தற்கொலை: குழந்தைகள் நல ஆணையம் விசாரணை

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

மேலும், ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் அமர்வு விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மாணவியின் பெற்றோர், நண்பர்கள், பள்ளி நிர்வாகம், போலீஸார் உள்பட 13 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இதுதொடர்பாக மாநில குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவி தற்கொலை விவகாரத்தில் 13 சாட்சிகளிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com