திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: பல்லடம் அருகே 5 குழந்தைகள் உள்பட 11 பேர் மீட்பு

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த 5 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டனர்.
பல்லடம் அருகே வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த ஐந்து குழந்தைகள் உள்பட 11 பேரை ரப்பர் படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்.
பல்லடம் அருகே வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த ஐந்து குழந்தைகள் உள்பட 11 பேரை ரப்பர் படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் பல்லடம் அருகே வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த ஐந்து குழந்தைகள் உள்பட 11 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. 

வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்த ஐந்து குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்ட தீயணைப்புத் துறையினர்.

அதிலும் குறிப்பாக பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன் பாளையம்,அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை ஆரம்பித்த கன மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இந்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியதால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டது.

பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளில் மழை சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவித்தவர்களை ரப்பர் படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்.

இந்நிலையில், அவினாசிபாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் காலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். வீட்டில் இருந்தவர்கள் அவினாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் வீடுகளில் சிக்கியிருந்த சங்கர், பிரியா அவர்களது குழந்தைகளான ஸ்ரீமதி(12),ஸ்ரீ ஹரி(9) மற்றும் மற்றொரு குடும்பமான கார்த்திக், கார்த்திகா, மகாலட்சுமி, முத்துச்செல்வம் பிரவீன்(8), பிரனிதா(6), தர்ஷீத்(2) ஆகியோரை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மாநகரில் பலத்த மழை: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் திருப்பூர் அனுப்பளையம் நொய்யல் ஆற்றுப்பாலம் தரையில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

அதேபோல மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com