புதுச்சேரியில் 19 செ.மீ மழை: குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளநீர்

புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 
தவளக்குப்பம் என்.ஆர். நகர் பகுதியில் குடியிருப்பில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்களை படகுகள் மூலம் மீட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர்.
தவளக்குப்பம் என்.ஆர். நகர் பகுதியில் குடியிருப்பில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்களை படகுகள் மூலம் மீட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர்.


புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி மாலை வரை கனமழை பெய்தது. தொடர்ந்து இரவு நேரங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மழை விட்டுள்ளது.

ஒரு நாள் பெய்த தொடர் மழை காரணமாக புதுச்சேரி 188 மி.மீ, பத்துக்கண்ணு 194 மி.மீ, திருக்கனூர் 253 மி.மீ, பாகூர் 134 மி.மீ மழை பதிவானது. புதுச்சேரியில் சராசரியாக 194 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதனால் புதுச்சேரியில் தாழ்வான கிருஷ்ணா நகர், வெங்கட நகர், எழில் நகர், உப்பளம், பாவனர் நகர், கிழக்கு கடற்கரை சாலை, தவளக்குப்பம் அரியாங்குப்பம் வில்லியனூர் திருக்கனூர்  உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளில் சூழ்ந்து தேங்கிய தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது.

புதுச்சேரி நகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழை நீர் வடிய வழியின்றி நிற்கின்றது.

தவளக்குப்பம் என்.ஆர். நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை தண்ணீர்.

79 ஏரிகள் நிரம்பின: 
புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் 79 ஏரிகள் நிரம்பி உள்ளன. சங்கராபரணி, தென்பெண்ணை, மலட்டாறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து செல்கிறது. தவளக்குப்பம் என் ஆர் நகர் பகுதியில் குடியிருப்பில் தண்ணீர் தேங்கியதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதியில்100 குடும்பத்தினரை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர்.

புதுச்சேரி முழுவதும் 194 மையங்களில் ஏற்படுத்தப்பட்டு, தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கியது அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் குப்பம் கடற்கரையை ஒட்டி கடல் அரிப்பால் உடைந்து சாலைகள் சேதமடைந்துள்ளன.

மீனவர் குப்பம் கடற்கரையை ஒட்டி கடல் அரிப்பால் உடைந்து சாலைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com