தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையில் இருந்த கருமாதி கொட்டகை அப்படியே விழுந்து நொருங்கியது.
வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையில் இருந்த கருமாதி கொட்டகை அப்படியே விழுந்து நொருங்கியது.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தில் உள்ள தடுப்பணை பழுதான தால் அதை வெடிவைத்து தகர்க்கும் பணி கடந்த வாரம் நடந்தது‌ ஆனால் அம்முயற்சி தோல்வி அடைந்தது.

இதற்கிடையே வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் சாத்தனூர் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் வினாடிக்கு 51,000 கன அடி நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் தளவானூர் அணையில் இடது கரையில் மண் அரிப்பு மேலும் விரிவடைந்தது வருகிறது. அணையை உடைக்க நிறுத்தப்பட்டிருந்த மிதவை பொக்லைன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இழுத்து செல்லப்பட்டு சிக்கி கிடக்கிறது.

ஆற்றங்கரையில் இருந்த கருமாதி கொட்டகை அப்படியே விழுந்து நொருங்கியது. ஆற்றங்கரையில் இருந்த பழமையான 3 புளிய மரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தளவானூர் அருகே திருப்பாச்சனூர் தரைப்பாலமும் வெள்ள நீரில் மூழ்கியது.

இதனால் தளவானூர், திருப்பாயச்சனூர், தெற்கு குச்சிப்பாளையம் கிராம் மக்கள் வெள்ளநீரால் சூழப்பட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com