வேளாண் சட்டங்கள் வாபஸ்: வாழப்பாடியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வாழப்பாடியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த திமுகவினர்.
வாழப்பாடியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த திமுகவினர்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பிரதமர்  நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்திலும் சட்டப்பேரவையில், இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குருநானக் பிறந்தநாளையொட்டி பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

கல்வராயன்மலை கருமந்துறையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்
கல்வராயன்மலை கருமந்துறையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்

இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒன்றிய திமுக செயலாளர் எஸ். சி. சக்கரவர்த்தி தலைமையில்,  சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி, நகர திமுக செயலாளர் செல்வம் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர்,  வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து திமுக ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த பலனாக, வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படவிருந்த தீங்கு நீங்கியுள்ளது என்றார்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில், பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com