பாலியல் தொல்லையால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். 
இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண் பிள்ளைகள் மன உறுதியை கையாண்டு பெற்றோரிடம் தன் இன்னல்களை தெரிவிக்க வேண்டும்.மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். 

ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1860ம் ஆண்டின் IPC சட்டப்படி, கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டன.  அதை பின்பற்றி இச்செயலுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com