
துணி காய வைத்த கம்பியில் மின்சார கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கோமதி.
கிருஷ்ணகிரி : வேப்பனப்பள்ளி அருகே துவைத்த துணியை கம்பியில் காயவைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கணப்பள்ளி கிராமத்தை ராகவனின் மனைவி கோமதி (30). இவர், துணிகளை துவைத்து வீட்டின் அருகே உள்ள கம்பியில் காயவைக்க முயன்றார்.
அப்போது, அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிக்க | நிறுவன இணையதளத்தில் மட்டுமே வேலைவாய்ப்பு அறிவிப்புகள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
தகவலறிந்த போலீஸார் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | சா்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது
துணி காய வைத்த கம்பியில் மின்சார கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கோமதி சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.