
வாலாஜாபாத், உத்திரமேரூரில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.