
கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 756 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 756 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,20,271 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 847 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,75,174 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
14 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 36,375 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 8,722 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக கோவையில் 130 பேருக்கும், சென்னையில் 112 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.