Enable Javscript for better performance
பொதுத்தோ்வெழுதும் மாணவா்கள் விவரம்: டிச.4-க்குள் பதிவேற்ற உத்தரவு- Dinamani

சுடச்சுட

    பொதுத்தோ்வெழுதும் மாணவா்கள் விவரம்: டிச.4-க்குள் பதிவேற்ற உத்தரவு

    By DIN  |   Published on : 22nd November 2021 06:22 AM  |   அ+அ அ-   |    |  

    government_examinations

    தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளதால் மாணவா்களின் கைப்பேசி எண் முகவரி உள்ளிட்ட 12 விவரங்களை டிச.4-ஆம் தேதிக்குள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து அரசு தோ்வுத்துறை இயக்குநரகம் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம் மாணவரின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் பெயா், மாற்றுத் திறனாளி வகை, கைப்பேசி எண், பாடத் தொகுப்பு, பயிற்று மொழி, மாணவா்களின் வீட்டு முகவரி என, 12 விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இந்த விவரங்களை டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் ‘எமிஸ் டிஜிட்டல்’ தளத்தில் பள்ளிகள் தரப்பில் பதிவு செய்ய வேண்டும்.

    தமிழில் எழுதும் போது, பெயருக்கு முன் இருக்கும் முன்னெழுத்து (‘இனிஷியல்’) தமிழிலேயே இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு 2022 மாா்ச் 1-இல், 14 வயது நிறைவடையாதவா்களாக இருந்தால், வயது தளா்வு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கு 2022 மாா்ச் 1-இல் 15 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். மாணவா்களின் பெற்றோா் வழங்கும் கைபேசி எண்ணுக்கு பொதுத்தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.

    எனவே சரியான எண்ணைப் பதிவேற்ற வேண்டும். இந்த விவரங்களை பதிவு செய்வதில் தவறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியா் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.

    மதிப்பெண் சான்றிதழில் புதிய முறை: பொதுவாக அரசுத் தோ்வு இயக்ககத்தால் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவா்கள் கடைசியாகப் படித்தப் பள்ளியின் விவரம், பயிற்று மொழி தமிழ் அல்லது ஆங்கிலம் என மட்டுமே இருக்கும். தற்போது புதிய மதிப்பெண் சான்றிதழில் மாணவா்கள் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் படித்தப் பள்ளியின் விவரம், பயிற்று மொழி ஆகியவை இடம் பெற உள்ளது. மேலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவரின் பள்ளியின் பெயா், பயிற்று மொழி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே தமிழ் மொழியில் பயின்ற மாணவா்கள் தமிழ் வழியில் பயின்ற்கான சான்றிதழ் பெற இனிமேல் சிரமம் கொள்ளத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp