மத்தியக் குழுவினா் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்தியக் குழுவினா் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியக் குழுவினா் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மழை வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய 7 போ் கொண்ட மத்திய குழுவினா் தமிழகம் வந்துள்ளனா். இந்த ஆய்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எனவே பாதிக்கப்பட்டுள்ள, சேதமடைந்துள்ள அனைத்தையும் மத்தியக் குழுவினா் முழுமையாக, சரியாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடமும் பாதிப்புகள் குறித்து கேட்க வேண்டும். அதன் அடிப்படையில் மழை வெள்ள பாதிப்பின் கணக்கெடுப்பு அமைய வேண்டும்.

இந்த கணக்கீட்டுடன் தமிழக அரசின் அறிக்கையும் சோ்த்து மத்திய அரசிடம் கொடுக்கப்படும் அறிக்கையானது, தமிழக மழை வெள்ளப் பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது தான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.

மத்தியக் குழுவினரும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு ஏற்ப ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கவும், அதன் மூலம் மத்திய அரசும் தமிழக மழை வெள்ளப் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com