16 ஆண்டுகளுக்குப் பின்  நிரம்பியது ஆனைமடுவு அணை: வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை காலை  நிரம்பியது.
நிரம்பி வழியும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை.
நிரம்பி வழியும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை காலை  நிரம்பியது. இதனையடுத்து அணையிலிருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால்  பாசன விவசாயிகள் மற்றும் ஆற்றுப்படுகை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆணைமடுவு அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், வசிஷ்ட நதிக்கு பாய்ந்து செல்லும் காட்சி.
ஆணைமடுவு அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், வசிஷ்ட நதிக்கு பாய்ந்து செல்லும் காட்சி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. 

இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

நிரம்பி வழியும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை.
நிரம்பி வழியும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சி.என். பாளையம், சி.பி.வலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. 

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதி ஆனைமடுவு அணை கடைசியாக நிரம்பியது. அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக அணை நிரம்பவில்லை. இந்நிலையில், நிகழாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பருவ மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. புதன்கிழமை காலை அணையின் நீர்மட்டம்  65.45 அடியாக உயர்ந்தது. அணையில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. 

ஆணைமடுவு அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர், வசிஷ்ட நதிக்கு பாய்ந்து செல்லும் காட்சி.
ஆணைமடுவு அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர், வசிஷ்ட நதிக்கு பாய்ந்து செல்லும் காட்சி.

அணையின் பாதுகாப்பு கருதி,  அணைக்கு வரும் நீர் அளவான வினாடிக்கு 122 கன அடி தண்ணீரும், அணையின் பிரதான மதகு வழியாக  உபரி நீராக வசிஷ்டநதியில்  திறக்கப்பட்டுள்ளது. 

16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமடுவு அணை நிரம்பியதோடு, அணையிலிருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆனைமடுவு அணை பாசன விவசாயிகள் மட்டுமின்றி, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com