10 நாடுகளில் இருந்து வருவோருக்குகரோனா பரிசோதனை கட்டாயம்: பொதுசுகாதாரத்துறை

கரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 நாடுகளில் இருந்து தமிழகம் வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 நாடுகளில் இருந்து தமிழகம் வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக துறை சாா்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையி: ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மோரீஷஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதில் தொற்றில்லை என உறுதியான பிறகு, அவா்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்தப்பட்டு, அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுவா்.

மற்ற 99 நாடுகளில் இருந்து இங்கு வருவோா், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை மட்டும் வைத்திருந்தால் போதுமானது. இந்த உத்தரவு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com