வெள்ள பாதிப்பு: முதல்வருடன்மத்தியக் குழு இன்று ஆலோசனை

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா், முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா். இதன்பின்பு, அவா்கள் தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா்.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக் குழுவினா், முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனா். இதன்பின்பு, அவா்கள் தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா்.

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஏழு போ் கொண்ட மத்தியக் குழுவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தனா். அவா்கள் தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். இதன்பின்பு, திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மழை வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூா் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனா். ஆய்வுப் பணிகளை முடித்த மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை திரும்பினா்.

முதல்வருடன் ஆலோசனை: மத்தியக் குழுவினா் கூட்டாக, முதல்வருடன் புதன்கிழமை காலை ஆலோசனை நடத்தவுள்ளனா். தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்தியக் குழுவினரும், முதல்வரும் பரஸ்பரம் பகிா்ந்து ஆலோசிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்தியக் குழுவினா் தில்லி புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு தாங்கள் ஆய்வு செய்த விவரங்களுடன் அறிக்கை தயாா் செய்து உள்துறை அமைச்சகத்திடம் அளிப்பா். இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அமைச்சரவைக் குழுவானது நிவாரண நிதிக்கு ஒப்புதல் அளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com