நவ. 28 வரை மிக கனமழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இன்றுமுதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்றுமுதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தெற்கு வங்க கடற்பகுதியில்‌ (4.5 இலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இது மேலும்‌ மேற்கு வடமேற்கு தசையில்‌ வரும்‌ நாட்களில்‌ தமிழக கரையை நோக்கி நகரக்‌ கூடும்‌. இதன்‌ காரணமாக

24.11.2021: ராமநாதபுரம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி
மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

25.11.2021: ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர்‌, விழுப்புரம்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய வட கடலோர மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

26.11.2021: தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, கடலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, விருதுநகர்‌, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

27.11.2021: கடலூர்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சேலம்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுகுயில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

28.11.2021: சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com