ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சுவாமி தரிசனம்: சிறப்பான வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்க்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு புதன்கிழமை வருகை தந்த சிவராஜ் சிங்சவுகான் அங்கு கோயில் நிர்வாகத்தின் தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு புதன்கிழமை வருகை தந்த சிவராஜ் சிங்சவுகான் அங்கு கோயில் நிர்வாகத்தின் தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்க்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

புதன்கிழமை காலை 10.20க்கு வந்த அவருக்கு கோயில் நுழைவாயிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் வைத்து தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மனவாள மாமுனிகள் சன்னதி, அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள் சென்று ஆண்டாள் ரங்க மன்னாரை வழிபட்டார்.

வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியினர்

சிவராஜ்சிங்சவுகான் வருகையையொட்டி காவல் கண்காணிப்பாளர் மனோகர், காவல் துணைக்கண்காணிப்பாளர் சபரிநாதன், காவல் ஆய்வாளர் கீதா ஆகியோர் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு செல்லும்போது அவருடன் பாஜகவினர் அனுமதிக்கப்படாததால்  பாஜகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். இதனால் ஆண்டாள் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com