திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

தமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.
திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்
திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்


தமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.

ஆறுகள் பலவும், தங்களுக்குரிய நீர்ப்பரப்புகளை கைப்பற்றியவர்களிடமிருந்து எந்தவித சண்டையும் சச்சரவும் இன்றி, வழக்கும், தீர்ப்பும் இன்றி மீண்டும் அபரிகத்துக் கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடியது. 

காவிரி, யமுனைக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு பாலாறும் தனது பலத்தை நிரூபித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக சில சிற்றாறுகளின் பெயர்களும் செய்திகளில் அடிபட்டன.

பல பகுதிகளில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழியும் நிலையில், அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், தேர்வாய்க்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்ட நிலவரம் என்னவென்று பார்க்கலாம்.

செம்பரம்பாக்கம் ஏரி: ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். தற்போதைய மொத்த கொள்ளளவு 2,944 மில்லியன் கனஅடியாகவும், ஏரிக்கு நீா்வரத்து 750 கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து 2,149 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி - மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 2,464 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 8,444 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 9,243 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் - மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 797 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 614 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தேர்வாய்கண்டிகை - மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 500 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 149 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 149 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ரெட்ஹில்ஸ் - மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். தற்போது அதில் 2,807 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு ,1212 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து 1,698 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com