மாணவியை திருமணம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

திருவள்ளூரில் 9-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞரை திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். அதையடுத்து மாணவியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒ
போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் கோபி
போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் கோபி

திருவள்ளூர்: திருவள்ளூரில் 9-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞரை திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். அதையடுத்து மாணவியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூரில் உள்ள 14 வயதுள்ள மாணவி அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்த வந்தாராம். இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி முதல் வீட்டில் இருந்த மாணவி, திடீரென காணவில்லையாம். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் மாணவியின் சிநேகிகளிடம் விசாரித்ததில் எங்குள்ளார் என்பது தெரியவில்லை. இதையடுத்து திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் திருவள்ளூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் நாகலிங்கம், சார்பு ஆய்வாளர் மாலா ஆகியோர் மாணவி குறித்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். 

இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள அனுமந்தபேட்டை கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள அனுமந்தபேட்டை கிராமத்திற்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் தனது செல்லிடப்பேசி மூலம் 1 மாதத்துக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள அனுமந்தபேட்டை கிராமத்தில் வசிக்கும் கோபி (21) என்ற கட்டட தொழிலாளி அறிமுகமாகியுள்ளார். அதையடுத்து 2 பேரும் நாள்தோறும் செல்லிடப்பேசி மூலம் பேசி பழகியுள்ளனர். 

இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போன இந்த மாணவி திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு அனுமந்தபேட்டை கிராமத்திற்கு கோபியிடம் சென்றுள்ளார். அதையடுத்து அங்குள்ள கோயிலில் இருவரும் திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசார் சிறுமியை திருமணம் செய்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக போக்ஸோ சட்டத்தில் கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். அதற்கு அடுத்து மாணவியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின், இங்குள்ள குழந்தைகள் காப்பாகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com