Enable Javscript for better performance
கரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளா்கள் வாரிசுகளுக்கு விரைவில் பணி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்- Dinamani

சுடச்சுட

    கரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளா்கள் வாரிசுகளுக்கு விரைவில் பணி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

    By DIN  |   Published on : 25th November 2021 04:13 AM  |   அ+அ அ-   |    |  

    சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேப்பிட்டல் லேண்டு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு.

    சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேப்பிட்டல் லேண்டு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு.

     

    சென்னை: கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேப்பிட்டல் லேண்டு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

    இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வா் ஜெமிலா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூா்த்தி, கேப்பிட்டல் லேண்டு நிறுவனத்தினா் பங்கேற்றனா்.

    இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

    தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    நவம்பா் மாதம் இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 71 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், முதல் தவணை தடுப்பூசியை 76 சதவீதத்தினரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 40 சதவீதத்தினரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

    சிறப்பு முகாம்கள் நடத்தியும், வீடுகளுக்குச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் தனியாா் தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆா் நிதி பங்களிப்பில் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திய பிறகு வழங்கக்கூடிய சான்றிதழ்கள் தவறு இல்லாமல் சரியாக வழங்குவதற்கு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் விரைவில் பணி வழங்குவதற்கு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதியைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 1,500 மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத சிறப்பாகும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ மாணவா் சோ்க்கை என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 4,483 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6 போ் இறந்துள்ளனா். தற்போதையை நிலையில் 513 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp