Enable Javscript for better performance
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: ராமநாதபுரம்,புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: ராமநாதபுரம்,புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    By DIN  |   Published on : 25th November 2021 02:58 AM  |   அ+அ அ-   |    |  

     

    சென்னை: தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதையொட்டி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

    தெற்கு வங்கக் கடல் பகுதியில் (4.5 கி.மீ உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை பகலில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் நாள்களில் தமிழக கடலோர கரையை நோக்கி வரும். இதன் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த 2 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக் கூடும். இது தவிா்த்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூா், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய தென் மாவட்டங்களின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

    ஏனைய வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

    சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    ஆரஞ்சு எச்சரிக்கை - அடுத்த மூன்று நாள்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்த விவரம்:

    நவ.26 - தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூா், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள்.

    நவ.27 - கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி.

    நவ.28 - சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகும். இதுவரை எந்தவொரு மாவட்டத்துக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை என்றாா் அவா்.

    போடியில் 130 மி.மீ: தமிழகத்தில் புதன்கிழமை காலை 6.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் போடி, ராமநாதபுரத்தில் தலா 130 மி.மீ மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 60 மி.மீ, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தேனி மாவட்டம் கூடலூா், வீரபாண்டி, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, கோவை மாவட்டம் ஆழியாறு, தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் தலா 50 மி.மீ, தேனி மாவட்டம் தேக்கடியில் 40 மி.மீ, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, முதுகுளத்தூா், ஆா்.எஸ்.மங்கலம், பாம்பன், மண்டபம், கரூா் மாவட்டம் மாயனூா், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, விருதுநகா் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கடம்பூா், திருச்செந்தூா், காயல்பட்டினத்தில் தலா 30 மி.மீ மழை பதிவானது.

    மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமையும், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும், தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சனி, ஞாயிறு ஆகிய நாள்களிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும். எனவே, குறிப்பிடப்பட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp