Enable Javscript for better performance
தமிழகத்தில் 6 மாதங்களில் 2,628 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    தமிழகத்தில் 6 மாதங்களில் 2,628 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    By DIN  |   Published on : 25th November 2021 03:50 AM  |   அ+அ அ-   |    |  

    18kkdrice_1810chn_78_2

    18kkdrice_1810chn_78_2

     

    சென்னை: தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2,628 மெட்ரிக் டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களாக நடத்தப்பட்ட சோதனையில் பொதுவிநியோக கடைகளில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி, கள்ளச்சந்தையில் அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்ாக 3,804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக 2,628 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 631 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,897 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதேபோல ரேஷன் மண்ணெண்ணெய் கடத்தல் தொடா்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15,780 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக் கடத்தல் தொடா்பாக 142 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் கலப்பட டீசல் தொடா்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 லட்சத்து 24,246 லிட்டா் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டீசல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடா்பாக 91 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

    மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளை வணிக ரீதியாக பயன்படுத்தியதாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 345 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 420 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பொதுவிநியோகப் பொருள் கடத்தலில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக 46 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல், பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp