12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதையொட்டி, தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை: 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதையொட்டி, தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை பகலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து வந்து தமிழக கடலோர கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாள்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 

இதன்படி தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டின, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மிதமான மழை பெய்து வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com