திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளநீர்; பக்தர்கள் அவதி

திருச்செந்தூரில் வியாழக்கிழமை காலை பெய்த பலத்த மழையினால் குடியிருப்புகள் மற்றும் முருகன் கோயிலைச் சுற்றி மழை நீர் சூழ்ந்தது.
திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளநீர்
திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளநீர்

திருச்செந்தூரில் வியாழக்கிழமை காலை பெய்த பலத்த மழையினால் குடியிருப்புகள் மற்றும் முருகன் கோயிலைச் சுற்றி மழை நீர் சூழ்ந்தது. நகரே வெள்ளக்காடானதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதியடைந்தனர்.

திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், நகரெங்கும் மழை நீர் சூழ்ந்தது.  சுமார் 3 மணி நேரத்தில் 17 செ.மீ. மழை பதிவானதால் தெருவெங்கும் வெள்ளக்காடாய் இருந்தது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிரிப்பிரகாரம்,, சண்முக விலாசம் பகுதியில் இருந்து மழைநீர் திருக்கோயில் உள்ளேயே வழிந்து ஓடியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com