புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

திருவள்ளூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 
கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து 1,500  கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து 1,500  கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதில் புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் நீர்வரத்து 803 கன அடியில் இருந்து 1,633 கன அடியாக அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி 1,500 கன அடி நீர் வெளியேற்றம் செய்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com