உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி

தமிழகத்தில் விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் காங்கயம் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருப்பூர் காங்கயம் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருப்பூர்: தமிழகத்தில் விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

இன்றைய நாள் தமிழர் இன வரலாற்றில் மறக்கமுடியாத மாவீரர் நாளாகும். தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக தங்களது உயிரிகளைத் தியாகம் செய்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களைப் போற்றும் நாளாகும்.

தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழ் இன மக்கள் இந்த நாளைப் போற்றி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் வேண்டும் என்றே கிடப்பில் போட்டு வருகிறார்.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கொள்கை மாறுபாடு கிடையாது, தமிழ் இனத்துக்கும், உரிமைக்கும், உணர்வுக்கும் எதிராகத்தான் இருப்பார்கள். தமிழகத்தில் ஆளுநர்தான் ஆட்சியை நடத்துவதுபோல் தெரிகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை கூட ஆளுநரின் ஆணைக்கிணங்க என்று தான் இருக்கிறது.

நீட் தேர்வின் மூலமாக தகுதியை வளர்த்த முடியாது. நுழைவுத் தேர்வு என்பதும், தகுதித்தேர்வு என்பதும் வேறுதான். வடமாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேர்வு மையத்தில் மேற்பார்வையாளர்களே காப்பி அடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்களைத் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவே திரும்பப்பெறப்பட்டுள்ளது என்றார்.

இந்த சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகர் மாவட்டத் தலைவர் ரத்னா ஜெ.மனோகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com