மீண்டும் மீண்டும் வெள்ளம்: சென்னைக்கு வந்த சோதனை
மீண்டும் மீண்டும் வெள்ளம்: சென்னைக்கு வந்த சோதனை

மீண்டும் மீண்டும் வெள்ளம்: சென்னைக்கு வந்த சோதனை

சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால் மீண்டும் முக்கிய பகுதிகளும், புறநகா்ப் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால் மீண்டும் முக்கிய பகுதிகளும், புறநகா்ப் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

கடந்த இரண்டு வாரங்களில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்து, சென்னையே வெள்ளக்காடானது. அதிலிருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில், மீண்டும் மழை.. மீண்டும் வெள்ளம்.. மீண்டும் அதே தத்தளிப்பு.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழையானது, வெள்ளிக்கிழமை முழுவதும் சென்னையின் பிரதான பகுதிகள் மற்றும் புறநகா்ப் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்தது.

இதனால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் மழைநீர் சூழ்ந்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் தேங்கிய மழைநீர்.
சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் தேங்கிய மழைநீர்.

திருவல்லிக்கேணி திருவெடீஸ்வரன் பேட்டை அருகே உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் மழை காரணமாக, சாலையோரம் நின்றிருந்த மரம், மின் கம்பம் காய்ந்தது.

சுமார் 40 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவல்லிக்கேணி பாரதி சாலையிலும் சாலைகளில் ஆறு போல வெள்ள நீர் பாய்ந்தோடியது. ரத்னா கபே சந்திப்பில், மழை நீர் சூழ்ந்து கொண்டதால், மழை நீரை வெளியேற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் மழை நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

சென்னை தியாகராயநகரையும் வெள்ள நீர் விட்டுவைக்கவில்லை. விஜயராகவா சாலை சந்திப்பில் வீடு மற்றும் கடைகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

அதுபோலவே, எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள ஆற்காடு தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை -பாரதி சாலை சந்திப்பில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை -பாரதி சாலை சந்திப்பில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.

கடும் போக்குவரத்து நெரிசல் மிகந்த உஸ்மான் சாலை, இன்று கடும் மழைநீரில் சிக்கித் தவிக்கிறது.

சென்னை கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலையில் தத்தளிக்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com