அதியமான்கோட்டையில் கால பைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
அதியமான்கோட்டையில் கால பைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
அதியமான்கோட்டையில் கால பைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

தருமபுரி: தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.

இத் திருக்கோயிலில், காலபைரவர் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகம், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்திலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் பைரவரை வழிபட்டனர். 

இதேபோல, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள், சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். கரோனா பரவலை தடுப்பு விதிமுறைகளையொட்டி கோயில் பிராகரத்தை வலம் வர பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து மாலையில் காலபரைவர் திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com