யானைகள் பலி: ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் பலியானதில், 2 ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யானைகள் பலி: ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு


கோவையில் ரயில் மோதி 3 யானைகள் பலியானதில், 2 ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லையான நவக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் மங்களூர்-சென்னை விரைவு ரயில் மோதி 3 யானைகள் பலியாகின. தகவலறிந்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், யானைகளின் உடல்களுக்கு கற்பூரம் ஏற்றி  அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து யானைகளின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்ய வனத் துறையினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, ரயிலை இயக்கிய ஓட்டுநர் சுபயர் மற்றும் அவரது உதவியாளர் முகில் ஆகியோரை ரயில்வே காவல் துறையினர் மற்றும் வனத் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை தலைமை வனப் பாதுகாவலர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com