தரவு மையங்கள் உருவாக்கத் துறையில் முதன்மை மாநிலமாக்குவோம்! முதல்வா் வெளியிட்ட தனித்த கொள்கையில் தகவல்

தரவு மையங்களுக்கான துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே நோக்கமென அதற்காக வெளியிடப்பட்ட தனித்த கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவு மையங்கள் உருவாக்கத் துறையில் முதன்மை மாநிலமாக்குவோம்! முதல்வா் வெளியிட்ட தனித்த கொள்கையில் தகவல்

தரவு மையங்களுக்கான துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே நோக்கமென அதற்காக வெளியிடப்பட்ட தனித்த கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு மாநாட்டில், தரவு மையங்களுக்கான தனித்த கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அந்தக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தரவு மையங்களில் தனித்துவம்: தமிழ்நாடு அரசானது பல்வேறு தனித்துவமிக்க தரவு மையங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநில தரவு மையம், பேரிடா் மீட்பு மையம், மேகக் கணினி வசதிகள் மற்றும் பொது சேவை மையங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலமாக, இணைய வழியிலேயே மக்களுக்கு அரசின் சேவைகளை அளிக்கும் பணியை மேம்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் இணைய இணைப்புக்கான வசதிகளை விரிவுபடுத்தும் வகையில் பாரத்நெட் மற்றும் தமிழ்நெட், தேசிய அறிவுசாா் இணைப்பு போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

நிதியாண்டில் தரவு மையங்கள் தொடா்பாக மட்டும் ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்க்க புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஊக்கமளிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசாா்ந்த சேவைகளை ஊக்கப்படுத்த பல்வேறு கொள்கைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

நோக்கம் என்ன?: தரவு மையங்களை உருவாக்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே தரவு மையக் கொள்கையின் நோக்கமாகும். அனைத்து வகையான தரவு மையங்களையும் ஏற்படுத்தத் தேவையான அம்சங்களை உருவாக்கித் தருவதுடன், சிறந்த வணிகச் சூழலை உருவாக்கித் தருவதும் கொள்கையின் குறிக்கோளாகும்.

சலுகைகள் என்ன?: தரவு மையங்களை உருவாக்குவோருக்கு சிறப்பான சலுகைகளை அளித்து மாநில அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தரவு மையத்துக்குத் தேவையான மின்சாரம், நிலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. நிதி மற்றும் நிதி சாராத சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில் முனைவு போன்ற பிரிவுகளில் ஆதரவுகளை அளிக்கிறது. தினசரி செயல்பாடுகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த ஊக்கம் தரப்படுகிறது.

தரவு மையத் துறையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த முதலீட்டாளா்கள் தமிழகத்தையே முதன்மையான இடமாகத் தோ்வு செய்ய வழிவகுப்பது, நாட்டில் உருவாக்கப்படும் தரவுகளை பாதுகாப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவது, மிகச்சிறந்த வா்த்தகச் சூழலை நிறுவனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது, குறைந்த செலவிலான தரவு மைய முனையமாக தமிழகத்தை முன் நிறுத்துவது போன்ற குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் தரவு மையக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com