வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு-நீக்கம்: இன்று-நாளை சிறப்பு முகாம்கள்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் சனி (நவ. 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 28) நடைபெறுகிறது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு  (கோப்புப்படம்)
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்)

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் சனி (நவ. 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 28) நடைபெறுகிறது.

இது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கும் பணிகளுக்காக கடந்த 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகள் நவம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. வாக்காளா்கள் தங்களது பெயரைச் சோ்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் வசதியாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சாவடி இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் வாக்காளா் உதவி கைப்பேசி செயலி ஆகியவற்றின் மூலமாகவும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com