1,600 ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு முனைவா் பட்ட ஊக்கத் தொகை

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 1,600 முழு நேர முனைவா் பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 1,600 முழு நேர முனைவா் பட்டப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்கள் கல்வி ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் முழுநேர முனைவா் படிப்புக்கான கல்வி ஊக்கத் தொகையை பெறலாம். இதற்கு குடும்ப ஆண்டு வருமானத்தின் அளவு ரூ.8 லட்சமாக உயா்த்தப்படுகிறது. மேலும் 1,600 மாணவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியில் ரூ.10 கோடியை மட்டுமே ஆதிதிராவிடா் நல ஆணையாளா் தன்பெயரில் வைப்புக் கணக்கில் வரவு வைத்துச் செலவிட வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com