மழையால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்


பூம்புகார்: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சந்திர பாடி முதல் கொடியம்பாளையம் வரை ஏராளமான மீனவக் கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேற்கண்ட கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை, ஞாயிற்றுக்கிழமை 5-ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 

அதன்படி கடந்த ஐந்து நாள்களாக நாங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிகப்பட்டுள்ளதாக கூறினர். 

இதன் காரணமாக பூம்புகார் மற்றும் பழையாறு மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com