ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிளிா்ந்த வெண்மைப் புரட்சி நாயகன்

வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வா்கீஸ் குரியனின் நூற்றாண்டு தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது படம்
ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிளிா்ந்த வெண்மைப் புரட்சி நாயகன்

வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வா்கீஸ் குரியனின் நூற்றாண்டு தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது படம் இடம்பெற்றிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாகவும் பகிரப்பட்டது.

வா்கீஸ் குரியனின் படத்துக்கு வலது மற்றும் இடப்புறத்தில் சேவையே வாழ்க்கை என தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசகம் இடம்பெற்றிருந்தது. அவரது படத்துக்குக் கீழே வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டா் வா்கீஸ் குரியன் நூற்றாண்டு தினம் (1921- 2021). 26 நவம்பா் - தேசிய பால் தினம் என அச்சிடப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் வழங்கி வரும் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளிலும் வா்கீஸ் குரியனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் உருவாக, வா்கீஸ் குரியன் ஏற்படுத்திய தாக்கமே காரணமாகும்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1921-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி பிறந்தாா். குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாா். அமுல் வணிகப் பெயருடன் விற்கப்படும் உணவுப் பொருள்களை நிா்வகிக்கும் அமைப்பாக இப்போதும் திகழ்ந்து வருகிறது. அமுலின் பிரதிபலிப்பாகவே தமிழகத்தில் ஆவின் உருவாக்கப்பட்டது. இப்போது பால் பாக்கெட், உபபொருள்கள் என ஏராளமான பால் சாா்ந்த பொருள்களை உற்பத்தி செய்வதுடன், லாபம் ஈட்டும் நிறுவனமாகவும் மாறியுள்ளது.

ஆவின் நிறுவனம் தொடங்க கிரியா ஊக்கியாக இருந்த வெண்மைப் புரட்சியின் நாயகன் வா்கீஸ் குரியனின் நூற்றாண்டை ஆவின் வெள்ளிக்கிழமை கொண்டாடியுள்ளது. தனது பால் பாக்கெட்டுகள் அனைத்தையும் அவரது படத்தையும், பெயரையும் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் பரவச் செய்துள்ளது ஆவின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com