Enable Javscript for better performance
கோயம்பேட்டில் தக்காளி ஏற்றிவரும் லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் இடம் வழங்க உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    கோயம்பேட்டில் தக்காளி ஏற்றிவரும் லாரிகளை நிறுத்த ஒரு ஏக்கர் இடம் வழங்க உத்தரவு

    By DIN  |   Published On : 29th November 2021 06:00 PM  |   Last Updated : 29th November 2021 06:01 PM  |  அ+அ அ-  |  

    high court

    சென்னை உயர் நீதிமன்றம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த ஒரு ஏக்கர் இடத்தை ஒதுக்க கோயம்பேடு சந்தை கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

    முந்தைய விசாரணையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில், 'வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியை வைப்பதற்கு இடமில்லாமல் லாரியிலே இருப்பதால் தக்காளி அழுகிவிடுகிறது. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும். அவ்வாறு கோயம்பேட்டில் தக்காளி மைதானத்தைத் திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் தயாராக இருக்கிறோம்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    தொடர்ந்து, நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு முன்பாக இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மார்க்கெட் கமிட்டி தரப்பில், 8 இடங்களில் 800 வாகனங்ளை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் உள்ளன. வேண்டுமெனில் தக்காளி விற்பனை இடத்திற்கு அருகில் உள்ள இடத்தை தக்காளி வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

    அதுபோல, தக்காளியை லாரியிலிருந்து வேறு சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே இந்த மைதானத்தைப் பயன்படுத்துவோம் என்றும் மைதானத்தில் விற்பனை செய்ய மாட்டோம் என்றும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து,  கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் இடத்தை ஒதுக்கவும் நாளை முதல் அந்த இடத்தை பயன்படுத்தவும் கோயம்பேடு சந்தை கமிட்டிக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

    மேலும், சோதனை அடிப்படையில் இரு வாரங்களுக்கு இதனைக் கடைப்பிடித்து அதில் உள்ள நிறை குறைகளை இருதரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

    இதையும் படிக்க | ரூ. 40-க்கு தக்காளி விற்கத் தயார்: உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் சங்கம் உறுதி


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp