பள்ளிப்பாளையத்தில் கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் தத்தளித்த வாகனங்கள்.
பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் தத்தளித்த வாகனங்கள்.


நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அறிவித்திருந்தது. 

அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி முதல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைநீர் செல்லும் வடிகால் பகுதிகள் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டிருந்தது. அதனால் ஓடையில் செல்ல வேண்டிய நீர் சாலைகளில் ஆறு போல ஓடியது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றோர் தண்ணீரில் தத்தளித்தபடி செல்ல முடிந்ததை காணமுடிந்தது. 

பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே 10 மணி வரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  ஈரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பவானி வழியாக திருப்பி விடப்பட்டன.  

பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் தத்தளித்த வாகனங்கள்.

நகராட்சி ஊழியர்கள் ஓடைகளை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

கொக்கராயன்பேட்டை பள்ளிப்பாளையம் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்தோர் சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, 452 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com