வேலை மறுக்கப்பட்டோருக்கு உடனே பணி வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

தனியார் வாகன தொழிற்சாலையில் வேலை மறுக்கப்பட்டோருக்கு உடனே பணி வழங்கக் கோரி நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் வாகன தொழிற்சாலையில் வேலை மறுக்கப்பட்டோருக்கு உடனே பணி வழங்கக் கோரி, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கத்தினர்.
தனியார் வாகன தொழிற்சாலையில் வேலை மறுக்கப்பட்டோருக்கு உடனே பணி வழங்கக் கோரி, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கத்தினர்.

திருவள்ளூர்: தனியார் வாகன தொழிற்சாலையில் வேலை மறுக்கப்பட்டோருக்கு உடனே பணி வழங்கக் கோரி நிலம் கொடுத்த விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். 

வாகன தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தோர் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப்பொதுச்செயலாளர் கே.ரவி, மாவட்ட தலைவர் கசேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதில் தனியார் வாகன தொழிற்சாலையில் வேலை மறுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனே வழங்கவும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com