திருவந்திபுரம் கோயிலில் அக்.4 முதல் பக்தர்களுக்குத் தடை

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் அக்.4 முதல் 17ஆம் தேதி வரை பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
திருவந்திபுரம் கோயிலில் அக்.4 முதல் பக்தர்களுக்குத் தடை

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் அக்.4 முதல் 17ஆம் தேதி வரை பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம், திருவந்திபுரம், அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயிலில் 4.10.2021 முதல் 17.10.2021 வரை நடைபெற உள்ள தேசிகர் பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி திருக்கோயில் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு திருக்கோயில் வளாகத்திற்குள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு உள்புறப்பாடு நடைபெறும்.
இவ்விழாக்காலங்களில் பொதுமக்கள் வருகை அதிகமாக இருப்பதால் இது கரோனா நோய் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 4.10.2021 முதல் 17.10.2021 வரை பொதுமக்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை செய்யப்படுகிறது.
மேற்படி திருவிழா காலத்தில் திருக்கோயில் வளாகத்தில் சுவாமி உள்புறப்பாடு நடைபெறும் நேரம் தவிர்த்து நண்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கரோனா நோய் தொற்று மூன்றாவது அலை வராமல் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை கருதியும், வெளியூர் பக்தர்கள் இவ்விழா காலகட்டங்களில் தரிசனத்திற்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும்.

அரசு உத்தரவு படி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை என்பது தொடரும். இந்நாட்களில் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
4.10.2021 முதல் 17.10.2021 வரை உள்ள விழா காலகட்டங்களில் சிறப்பு தரிசனத்தின் போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் பட்சத்தில் முழுவதுமாக பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com