உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்: கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி வலுப்படுத்த வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் பேட்டியளிக்கும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் பேட்டியளிக்கும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை:  உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி வலுப்படுத்த வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் என்பது மக்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை வழங்கும் திட்டம். ஆண்டுக்கு 100 நாள்கள்தான் இந்த வேலை. ஆனால், சராசரியாக 55 நாள்கள்தான் வேலை கிடைக்கின்றன. மீதமுள்ள 250 நாள்களுக்கு வேற வேலைக்குப் போகாமலா இருப்பார்கள்.

கிராமப்புற வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டை விடவும், நிகழாண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்திருக்கிறார்கள். ஏறத்தாழ இத்திட்டத்தை ஒழித்துக் கட்டும் வேலையை பிரதமர் மோடி செய்கிறார். அதற்கு வக்காலத்து வாங்கும் வகையில்தான் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் செயல்படுகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் 10.75 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதை நாம் தமிழர் சீமான் கேட்டாரா, ஆனால், 16 கோடி ஏழை மக்களுக்கு பயன்படும் திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கப்படும் என ரூ. 100 கோடி மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

உள்ளா்ட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் முடிந்த பிறகு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும். மக்களை அதிகாரப்படுத்தும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும். மின்விளக்கு கூட வாங்க முடியாத நிலையில்தான் ஊராட்சி நிர்வாகங்கள் உள்ளன. மாநில அளவிலான ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றன. இதனால், ஊழல் முறைகேட்டுக்குதான் வழிவகுக்கும்.

ஒருங்கிணைந்த நகர்ப்புற உள்ளாட்சிக்கான தனி சட்டத்தை அமலாக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்தச் சட்டம் அமலாக்கப்படாமல் உள்ளது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை போல உள்ளாட்சி மன்றம் மூன்றாவது அமைப்பாக அதிகாரபலத்துடன் செயல்பட வேண்டும்.

ஐஏஎஸ் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு கிராமப்புற ஏழை மாணவர்கள் அதிகம் பேர் வெற்றி பெறும் வகையில் உரிய பயிற்சிகளை மாநில அரசு வழங்க வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களைப் போல உள்ளாட்சித் தேர்தலில் முழுமையாக 100 சதவிகித கூட்டணியை ஏற்படுத்த முடியாது. சில இடங்களில் உள்ளூர் அரசியல், பலத்தைப் பொருத்து போட்டிகள் நிர்ணயிக்கப்படும். அதனால் மாநில அளவிலான கூட்டணியில் விரிசல் என்று சொல்ல முடியாது.

எச். ராஜா அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார். இத்தனை நிதி நெருக்கடிக்கு மத்தியில், மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பலரும் பாராட்டி வரும் நிலையில், கருணாநிதியைவிடவும் ஸ்டாலின் மோசமானவர் என அவர் ஏன் சொல்ல வேண்டும்.

பொதுவாகவே எச். ராஜா, இதுவரை யாரை கேவலமாகப் பேசாமல் இருந்தார். எல்லோரையும் கேவலமாக பேசுகிறார். அநேகமாக இன்னும் சில காலத்தில் பாஜகவினரை எதிர்த்தும் கூட எச். ராஜா பேசக் கூடும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.

பேட்டியின்போது, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com