முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர விரும்புவோா், திங்கள்கிழமை (அக்.4) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர விரும்புவோா், திங்கள்கிழமை (அக்.4) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான (2021-22) விண்ணப்பங்களை திங்கள்கிழமை (அக்.4) முதல் அக்.13-ஆம் தேதி வரை  www.tngasaedu.in, www.tngasaedu.org இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் அருகிலுள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்கள் விண்ணப்பப் பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தோ்வு செய்தல் வேண்டும். இது தொடா்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சோ்க்கை எண்ணிக்கை விவரங்கள் உள்ளிட்டவை  இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவா்கள் 044 2826 0098 என்ற எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

இது தொடா்பாக  care@tngasaedu.org மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் மாணவா்கள் சந்தேகங்களை கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரா்கள் பற்று அட்டை, கடன் அட்டை, இணையவழி வங்கி சேவை மூலம் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவா்கள் கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில்  The Director, The Directorate Of Collegiate Education, Chennai-6 என்ற பெயரில் திங்கள்கிழமை (அக்.4) அல்லது அதற்குப் பின்னா் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

அனைத்து சோ்க்கை உதவி மையங்களிலும் போதியளவு கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவா் சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை குறிப்பிடப்பட்ட இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com