புலியைக் கொல்ல வேண்டாம்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மசினகுடி வனப் பகுதியில் 4 பேரைக் கொன்ற புலியைத் தேடும் பணி தொடா்கிறது.
புலியை கொல்ல வேண்டாம்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
புலியை கொல்ல வேண்டாம்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள மசினகுடி வனப் பகுதியில் 4 பேரைக் கொன்ற புலியைத் தேடும் பணி தொடா்கிறது. இந்நிலையில், தேடப்பட்டு வரும் புலியை கொல்ல வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேடப்பட்டு வரும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம். புலியை பிடிக்கும் போது மற்ற விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது. புலியை பிடிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்ல உத்தரவிடப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், புலியை பிடிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 2 வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி என்ன?
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதி, மசினகுடி வனத்தில் 4 பேரையும், 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற புலியைப் பிடிக்க வனத் துறையும் அதிரடிப் படையினரும் தொடா்ந்து பத்து நாள்களுக்கும் மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேபீல்டு எஸ்டேட்டிலும், தேவன் எஸ்டேட்டிலும் அடிக்கடி தென்பட்ட புலி மசினகுடி வனப் பகுதியில் தென்படவில்லை. இதனால், தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சிங்காரா சாலையில் உள்ள வனப் பகுதியில் புலி தென்பட்டது என்ற தகவல் கிடைத்ததை வனத் துறையினா் உறுதிப்படுத்தவில்லை.

மூன்று குழுக்கள் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும், கும்கி யானைகள் மீது அமா்ந்து மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடனும் வனப் பகுதிக்குள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா். இருப்பினும், அந்தப் பகுதியில் புலி இருப்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. நேற்று இரவு 7 மணியளவில் தேடுதல் பணியை முடித்துக் கொண்டு வனத் துறையினரும், அதிரடிப் படையினரும் வனப் பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டனா்.

இந்த நிலையில், ஆட்கொல்லி புலி என்று கூறப்படும் புலியை சுட்டுக் கொல்ல பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com