ஈரான் சிறையிலிருந்து 19 மாதங்களுக்குப் பின் தமிழகம் திரும்பிய மீனவர்கள்

ஈரானில் 19 மாதங்கள் சிறைவைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் வீடு திரும்பினர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 9 பேர் கடந்த வருடம் குவைத் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி குழுமம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர்.

மீன்பிடிப்பதற்காக குவைத் நாட்டின் ஃப்ஹாகில் பகுதியில் இருந்து கிளம்பியவர்களை ஈரான் கப்பல் படையினர் எல்லை தாண்டி வந்ததற்காக கைது செய்தனர்.

பின் கடந்த 19 மாதங்களாக அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான மீனவர்கள் ஆல்பர்ட் ரவி , ஆரோக்கிய லிஜின் , தினாஸ் , காட்வின் ஜான் வெல்டன் , ஜோசப் பெஸ்கி , ஜேசுதாஸ் , சகாய விஜய் , மைக்கல் அதிமை மற்றும் வெலிங்டன் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவரின் சகோதரி ,’ குடும்ப நிலையை உயர்த்த குவைத் சென்றவர்களை ஈரான் அரசு கைது செய்து 19 மாதங்களாக சிறையில் வைத்திருந்தது. அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசு எடுத்த முயற்சிகளுக்கு நன்றி’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com