செங்கல்பட்டு அருகே காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் மேலக்கோட்டையூர் காவல் குடியிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வாளர் கௌதமன்.
தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வாளர் கௌதமன்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் மேலக்கோட்டையூர் காவல் குடியிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலக்கோட்டையூர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் கௌதமன் (59) வசித்து வருகிறார். இவர் விஐபிக்களுக்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வந்தார். சென்னையில் நீதிபதி ஒருவருக்கு சிறப்பு  உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர். இவர் கடந்த ஒருவாரமாக சென்னை வேலா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ள பிகார் மாநில பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அருண்குமாருக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார் உதவி ஆய்வாளர் கௌதம்.

இவருக்கு  மனைவி லதா (53) மகன்கள் சார் முகிலன்( 20), சார் சித்தார்த்தன் (16) உள்ளனர். இவரது மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் ரத்தம் உறைந்து போகும் பிரச்சனை இருப்பதால் மருத்துவச் செலவிற்காக பல இடங்களில் கடன்களை வாங்கி மருத்துவச் செலவு செய்துள்ளார். 

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் கடந்த வாரத்தில் விருப்ப ஓய்வு கொடுத்து விடலாம் என நினைப்பதாகவும் அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் எனவும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், மனைவியும் மகன்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் தான் உள்ளது, தற்போது நீங்களே விருப்ப ஓய்வு கொடுத்தால் முழுமையாக வரவேண்டிய பணம் வராது. அதனால் ஒரு வருடம் பணி செய்யும்படியும் கூறி உள்ளனர். 

இந் நிலையில் கௌதமன் உயர்நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது, கடன் கொடுத்தவர்கள் போன் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் மேலகோட்டையூர் காவலர் குடியிருப்புப் பகுதியிலும் மேலகோட்டையூர் பகுதியிலும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் பணிக்கு கிளம்பும்போது திடீரென்று  காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட தூப்பாக்கியை எடுத்து கௌதமன் நெற்றியில் சுட்டுக் கொண்டார்.

நெற்றியில் சுட்டுகொண்ட குண்டு தலையின் பின்பகுதியில் வெளியே வந்து விட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதும் ரத்த வெள்ளத்தில் கிடந்த கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பயங்கர சத்தம் கேட்ட பின்னர் அவரது மனைவி மற்றும் மகன், கௌதமனின் அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். கௌதமன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் காவல்துறையினர் இறந்து கிடந்த கௌதமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கியையும், குண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணிச்சுமை காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடன் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவம் நடந்த மேலக்கோட்டையூர் காவல் குடியிருப்பில் நேரில் சென்று விசாரணை நடத்தினார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com