கார் ஓட்டுநர்களே.. கவனம்.. மிக கவனம்; விடியோ வெளியீடு

கார் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு விடியோ ஒன்றை ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
கார் ஓட்டுநர்களே.. கவனம்.. மிக கவனம்; விடியோ வெளியீடு
கார் ஓட்டுநர்களே.. கவனம்.. மிக கவனம்; விடியோ வெளியீடு


கார் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு விடியோ ஒன்றை ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், காரில் வரும் வசதிபடைத்த நபர்களின் உடைமைகளை ஒரு மோசடி கும்பல் எவ்வாறு ஏமாற்றி அவர்களுக்குத் தெரியாமல் பறித்துச் செல்கிறது என்பதை, விடியோ மூலம் விளக்கியுள்ளது காவல்துறை.

இதனால், உண்மையிலேயே நாம் ஆபத்திலிருந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்லும் நிலை கூட ஏற்படலாம். ஆனால், சூழ்நிலையை கவனித்து, நிதானித்து செயல்பட வேண்டும் என்பதைத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த விடியோவில், காரின் முன் சக்கரம் பஞ்சர் என்று இருசக்கர வாகன ஓட்டிகள் சொல்வதும், அதை அவர் பரிசோதிக்கும் போது ஒரு பெண் முகவரி கேட்பதும். அப்போது வேறு திசையிலிருந்து வரும் ஒருவர் அவரது காரின் கதவை திறந்து அதற்குள்ளிருக்கும் பொருளை திருடுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது.

இதில், ஓரிடத்தில் கூட ஏமாற்றப்பட்டவருக்கு நாம் எங்கே, எப்போது ஏமாற்றப்பட்டோம் என்பது புரிபடாது. அந்த அளவுக்கு திட்டமிட்டு ஒரு மோசடிக் கும்பல் இவ்வாறு செயல்படுகிறது. 

எனவே, கார் ஓட்டிகள், இதுபோன்று முன்சக்கரம் பங்சர் என்று சொன்னதும், அங்கேயே வாகனத்தை நிறுத்திவிடாமல், சிறிது தள்ளிச் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு டயர்களை பரிசோதிப்பது சாலச்சிறந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com