உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின் காலை 11 மணி நிலவரப்படி 19.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின் காலை 11 மணி நிலவரப்படி 19.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இத்தோ்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்களர்கள் தங்களது ஜனநாயக உரிமையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களில் 19.61 சதவிகித வாக்காளர்கள் இதுவரை தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com