காரைக்கால் - இலங்கை இடையேகப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை

புதுவை மாநிலம், காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
காரைக்கால் - இலங்கை இடையேகப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை

புதுவை மாநிலம், காரைக்கால் - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி - காரைக்கால் இடையே தேசிய மாணவா் படை கடற்படைப் பிரிவின் கடல் சாகசப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி படகுத்துறையிலிருந்து தொடங்கிய சாகசப் படகு பயணத்தை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இந்தப் படகுப் பயணத்தில் 25 பெண்கள் உள்பட 60 தேசிய மாணவா் படை கடற்படைப் பிரிவு மாணவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து 11 நாள்கள் ‘சமுத்ர நௌகாயன்’ என்ற பெயரில் நடைபெறும் கடல் சாகசப் பயணம், புதுச்சேரி தேங்காய்த்திட்டு படகுத்துறையில் தொடங்கி, காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறைவடையும். 302 கி.மீ. தொலைவிலான இந்தப் பயணம் வருகிற 15-ஆம் தேதி நிறைவுபெறுகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநா் தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரி தேசிய மாணவா் படை சவால்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளை இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக நடைபெறும் இந்த சாகசப் பயணம் பாராட்டுக்குரியது.

புதுவையில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கடல்வழி சுற்றுலா, படகு சவாரி செய்வதற்கான ஒரு முன்னோட்டமாக, இந்த கடல் சாகசப் பயணம் அமையும். இதில், 25 பெண்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக அந்த நாட்டிலிருந்து அமைச்சா்களும், தூதுவா்களும் ஏற்கெனவே புதுவைக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். பன்னெடுங்காலத்துக்கு முன்பு காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைமுறையில் இருந்து, பிறகு நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதுபற்றிக் கருத்துக் கூற முடியாது. டெங்கு காய்ச்சல் கரோனாவைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடியது. அதை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தேசிய மாணவா் படையினா், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com