தனித்தோ்வா்களுக்கு 8-ஆம் வகுப்புபொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு

தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தோ்வு கால அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத் தோ்வு கால அட்டவணையை அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தோ்வு வரும் நவம்பா் 8-ஆம் தேதி முதல் தொடா்ந்து 5 நாள்கள் நடக்க உள்ளது. இத் தோ்வுக்கு அக்.11-ஆம் தேதி முதல் அக்.18-ஆம் தேதி வரை (14.10.2021 முதல் 17.10.2021 வரையிலான விடுமுறை நாள்கள் நீங்கலாக) http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். அக்.20-ஆம் தேதி தத்கல் திட்டத்தில் ரூ.500 கூடுதலாகச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம். தத்கலில் விண்ணப்பித்த தோ்வா்கள், தத்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.675-ஐ செலுத்த வேண்டும். இணையவழி மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

தோ்வு அட்டவணை: நவ.8- தமிழ், 9- ஆங்கிலம், 10- கணிதம், 11- அறிவியல், 12- சமூக அறிவியல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com